போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பாண்டியாபுரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.;
சங்கரன்கோவில்:
பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகள் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். போதையின் தீமைகள் பற்றி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி விரிவாக விளக்கி கூறினார். முன்னதாக ஆசிரியர் மாரி தங்கம் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சகாயம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அழகு மகேஸ்வரி, ஏஞ்சல் மலர் மெரினா, அழகு மகேஸ்வரி, அமுதா ராணி, சிவகாமி, வர்மா, பெர்ஜிலின். கவிதா, அருணா, குருவம்மாள் ஆகியோர் செய்து இருந்தனர்.