கோபாலசமுத்திரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கோபாலசமுத்திரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சேரன்மாதேவி:
முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம், கோபாலசமுத்திரம் பேரூராட்சி மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து 300 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல், 200 துணிப்பைகள் வழங்குதல், பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்குதல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை நடத்தின. பேரணி கோபாலசமுத்திரம் புறக்காவல் நிலையம் அருகில் தொடங்கியது. முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கோபாலசமுத்திரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்றார். கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, தனி அலுவலர் மீனாட்சி, பகுதி பொறுப்பாளர்கள் ஜெபமணி, செந்தில்குமார், அருள்முருகன், கோபால், மரியமிக்கேல், ஜீவா ஆகியோர் கருத்துரையாற்றினர். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் உச்சிமகாளி நன்றி கூறினார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப்பை வழங்கப்பட்டது.