ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 64 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின்
ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 64 பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக பதிவான வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 64 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தினமும் கையெழுத்திடவும், தலா ரூ.20 ஆயிரம் அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.