போலீஸ் நிலையங்களில்வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி
ஆழ்வார்திருநகரி, குரும்பூர் போலீஸ் நிலையங்களில்வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி நடந்தது.
தென்திருப்பேரை:
குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி ஆழ்வார்திருநகரி, குரும்பூர் போலீஸ் நிலையங்களில் நடந்தது. ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். குரும்பூர் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.