புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-06-04 17:15 GMT

இந்திய பல் மருத்துவ சங்கம் வேலூர் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் டவுன்ஹால் அருகே நடந்தது. ஊர்வலத்துக்கு வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சிகரெட், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஊர்வலம் பழைய பஸ்நிலையம், வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைடைந்தது. இதில் இந்திய பல் மருத்துவ சங்க நிர்வாகிகள் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்