புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-12 18:17 GMT

கந்தர்வகோட்டை அருகே கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் புகையிலை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படுகின்ற பல்வேறு தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புகையிலை மற்றும் போதை பொருட்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஆசிரியர்களால் விளக்கி கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்