புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோத்தகிரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-06-23 20:30 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி அறிவுறுத்தலின்படி, செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நுகர்வோர் சங்கங்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கோத்தகிரியில் நடைபெற்றது. பேரணியை வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து பேரணி தொடங்கி காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல் வழியாக சென்று பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

பேரணியில் புகையிலை பொருட்களை ஒழிப்போம், புகையிலை பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு, கோஷங்கள் எழுப்பியவாறு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்னர் பஸ் நிலையத்தில் அனைவரும் புகையிலை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேரணியில் சுகாதார ஆய்வாளர்கள் பிரேம்குமார், அசோக்குமார், குமாரசாமி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்