புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2023-06-01 18:45 GMT

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நன்னிலம் தலைமை டாக்டர் தருண் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் வட்டாரம் கோவில் வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் 100 நாள் பணியாளர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிங்காரவேலு, நீடாமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில்வெண்ணி சுகாதார ஆய்வாளர் சிவகுமார் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்