ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் சாராய ஒழிப்பு நடவடிக்கை

ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் சாராய ஒழிப்பு நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

Update: 2023-06-03 12:43 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குறித்து பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் துணை போலீஸ் சூப்பரண்டுகள் ரமேஷ்ராஜ், கோவிந்தசாமி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் உள்ள தும்பக்காடு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராய ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது ஜமுனாமரத்தூர் தாலுகா தும்பக்காடு கீழுர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (வயது 33), தும்பக்காடு மேலூர் கிராமத்தை சேர்ந்த முரளி (22) ஆகியோர் அவர்களது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்