முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

நெல்லை அரசு அலுவலகங்களில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-06-15 18:47 GMT

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகம்

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமையில், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இந்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) மூர்த்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஷிஜா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மின்வாரிய அலுவலகம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக தியாகராஜநகரில் உள்ள நெல்லை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை தலைமை மண்டல மின் பொறியாளர் குப்புராணி தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேற்பார்வை மின் பொறியாளர் (உற்பத்தி வட்டம்) தாமோதரன், மேற்பார்வை மின் பொறியாளர் (மரபுசாரா எதிர்சக்தி) செல்வராஜ், மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, துணைநிதி கட்டுப்பாட்டு அலுவலர் வீரலட்சுமணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மாநகராட்சி அலுவலகம்

நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் துணை ஆணையாளர் தாணுமலை மூர்த்தி தலைமையில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழியை, மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்