முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

கரூரில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2023-06-15 18:21 GMT

விழிப்புணர்வு ஊர்வலம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடந்தது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் இளைஞர்களே சிந்திப்பீர் நாளை நீங்களும் முதியோரே, மூத்தோர் சொல்லும், முழு நெல்லியும் முன் துவர்க்கும் பின் இனிக்கும், அன்பால் ஆதரவால் மட்டுமே முதுமையே வெல்ல முடியும், வயதின் முதிர்வை மட்டுமல்ல வாழ்க்கையின் முதிர்வையின் கண்டவர்கள் முதியோர், வீட்டின் பெயர் அன்னை இல்லம், அன்னை இருக்கும் இடம் முதியோர் இல்லம்.

கோஷம்

முதியோரே வீட்டின் மூத்த குழந்தைகள் அன்பு செய்வீர் இளையோர் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ெதாடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது.

பரிசுகள்

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியினை மாணவ-மாணவிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்