போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-08-10 20:00 GMT

இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் வில்பர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரபாண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இடையக்கோட்டையில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டும், சிலம்பாட்டம் ஆடிக்கொண்டும், போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். பள்ளி ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம், பசுமை படையை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்