பொன்னேரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்

பொன்னேரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-20 14:51 GMT

பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சேகர், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவிலான ராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

அதேபோல் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர் உமாமகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்