போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவ-மாணவிகள்
கோவில்பட்டியில் மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறை மற்றும் நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகள் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியனர். தீயணைப்பு அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியை தூத்துக்குடி மதுவிலக்கு காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு தொடங்கி வைத்தார். பேரணியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், போலீசார் திரளாக கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.