போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2022-06-28 17:00 GMT

விழுப்புரம்

விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் நேற்று காலை விழுப்புரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மூலம் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பாடல் குறித்த குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் கலந்துகொண்டு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்த குறுந் தகட்டினை வெளியிட்டதோடு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியாக சென்றனர்.

துண்டு பிரசுரம் வினியோகம்

இப்பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இப்பேரணியானது விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவி, உதவி ஆணையர்(கலால்) சிவா, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், இ.எஸ். கல்விக் குழுமத்தின் தாளாளர் சாமிக்கண்ணு, விழுப்புரம் சமூகநீதி பாதுகாப்பு இயக்க தலைவர் குபேரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்