போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆயர்பாடி மேல்நிலை பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-10 18:15 GMT

ஓச்சேரி அடுத்த ஆயர்பாடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி கலந்துகொண்டு பேசுகையில், அனைத்து மாணவர்களும் போதை பழக்கவழக்கங்களுக்கு உட்படாமல் நல்லமுறையில் படிக்க வேண்டும். பள்ளிக்கு அருகில் யாராவது கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைபொருட்களை விற்றால் தலைமை ஆசிரியரிடமோ அல்லது காவல் துறையிடமோ தகவல் தெரிவிக்கலாம். பள்ளி சீருடையை சரியான முறையில் அணிய வேண்டும் என்றார்.

இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்