சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி மாணவர்கள், நாடகம் மூலம் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி பேராசிரியர்கள் பெனிக்ஸ், மினிஷா ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் காமராஜ், முதல்வர் மரிய ஹெலன் சாந்தி மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.