போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்- பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

Update: 2022-08-11 18:19 GMT

திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்- பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த காணொலிக்காட்சி திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்றனர்..

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மண்டல இணை இயக்குனர் (உயர்கல்வித்துறை) எழிலன், கலால் உதவி ஆணையர் அழகிரிசாமி, கல்லூரி முதல்வர் கீதா, உதவி கலெக்டர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு கலைஅறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சக்திவேல் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் முன்னிலை வகித்தார். இதில் 700 மாணவி,மாணவிகள கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு பேசினார். முதுகலை ஆசிரியர் கவியரசன் உறுதிமொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு மன்னார்குடி கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். ஊர்வலத்தை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்