நெகமம் அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

நெகமம் அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

Update: 2022-10-30 18:45 GMT

நெகமம்

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி நெகமம் போலீசார் சார்பில் காணியாலாம்பாளையம் கிராமத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நெகமம் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் தலைமையில் போலீசார் கலந்து கொண்டு பேசினர். இதில் போதைப்பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன் சமூக மரியாதையும் குறையும், வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படும், பொது ஒழுக்கத்தை கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அமைக்க முடியும். மாணவர்களின் லட்சியம், கல்வியல் மட்டும் இருந்தால் சிறந்த பதவிக்கு வர முடியும் என எடுத்துரைக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்