போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வாழைப்பந்தலில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே வாழைப்பந்தலில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் வாழைப்பந்தலில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வாழப்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பஜார் வீதியில் இருந்து பெரிய தெரு வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், வாழைப்பந்தல் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.