போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

Update: 2022-10-16 15:09 GMT

வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வாலாஜா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்றது. 11 மற்றும் 21 கிலோமீட்டர் தூரம் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்

மாரத்தான் போட்டியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த மரத்தான் போட்டி அம்மூர், மாந்தாங்கல், முத்துக்கடை வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்