போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
சிவகாசி
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி யில் கணித பேராசிரியை அமுதா வரவேற்று பேசினார். முதல்வர் காந்திமதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது போதை பொருளால் மூளை மகிழ்ச்சி அடைகிறது. அது தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் போது இறுதியில் அந்த மகிழ்ச்சி நமது உயிரை பறித்துவிடுகிறது. எனவே இது போன்ற சிற்றின்பம் வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் வணிகவியல்துறை தலைவர் சுரேஷ், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் கணேசமுருகன், உடற்கல்வி இயக்குனர் சாந்தி, பிரபு, மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.