போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு நாளையொட்டி நேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் மெட்டில்டா சாந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா கலந்து கொண்டு போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறினார். அதனைத்தொடர்ந்து மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சவுந்தரராஜன், ஆசிரியர்கள் சத்தியவதி, உமா சரஸ்வதி, ராஜா மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் வீரமுத்து நன்றி கூறினார்.