கள்ளச்சாராயம் ஒழிப்பு பிரசாரம்
காவல் துறை, வருவாய்த்துறை இணைந்து கள்ளச்சாராயம் ஒழிப்பு பிரசாரம் செய்தனர்.;
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இன்று கலால், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தணிக்கை நடத்தினர்.
இதில் ஆரணி தாசில்தார் மஞ்சுளா, கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கோட்ட கலால் அலுவலர் தமிழ்மணி உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் தணிக்கை செய்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
கள்ளத்தனமாக சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வாட்ஸ் அப் எண்ணுடன் விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது.