லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.62 ஆயிரம் சிக்கியது

நெல்லை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.62 ஆயிரம் சிக்கியது.

Update: 2023-03-15 20:18 GMT

நெல்லை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.62 ஆயிரம் சிக்கியது.

திடீர் சோதனை

நெல்லை டவுன் பகுதியில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு மதுரை கே.புதூரை சேர்ந்த முனியசாமி மகன் முத்துமுருகன் (வயது 44) என்பவர் இணை சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலையில் அலுவலக நேரம் முடியும் போது நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெகலரின் எஸ்கால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராபின் ஞானசிங், சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகநயினார், மாரியப்பன் மற்றும் போலீசார் திடீரென்று சென்று சோதனை நடத்தினர்.

ரூ.62 ஆயிரம் சிக்கியது

அப்ேபாது, அலுவலக கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. அங்கு ஊழியர்களை தவிர மற்றவர்களை விசாரணைக்கு பின்னர் வெளியே அனுப்பினர்.

பின்னர் ஊழியர்களின் செல்போன்கள் அனைத்தையும் போலீசார் வாங்கி வைத்திருந்தனர். மேலும் அங்கு பணியில் இருந்த முத்துமுருகன், அலுவலக ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் உள்பட 7 பேரிடம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.62 ஆயிரம் சிக்கியது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்