கொடுஞ்செயல் எதிர்ப்பு சைக்கிள் பேரணி

கொடுஞ்செயல் எதிர்ப்பு சைக்கிள் பேரணி

Update: 2023-06-22 19:30 GMT

கூடலூர்

நீலகிரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கூடலூரில் நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக காந்தி திடலை வந்தடைந்தது. இதில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கூடலூர் அரசு தகைசால் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர் குழந்தைகள் தொழிற்பயிற்சி மைய மாணவர்கள், ராமகிருஷ்ணா, ஆஷா பவன் தன்னார்வலர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் முதியோர்களை எவ்வாறு அரவணைக்க வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, சேவைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. பேரணியில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகம்மது குதுரதுல்லா, கூடலூர் நகர்மன்ற தலைவர் பரிமளா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா மற்றும் ராமகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்