சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுக்கூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுபடியும், கலால் துறை உதவி இயக்குனர் பழனிவேல் அறிவுரைப்படியும் மதுக்கூர் பஸ் நிலையத்தில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நாடகம் நடந்தது. சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மதுக்கூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானசந்திரன் மற்றும் கவுன்சிலர் ரியாஸ் அகமது, போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.