கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள். நேற்று வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மஞ்சினியை சேர்ந்த பச்சமுத்து மகன் மணிவேல் (வயது 23) என்பவரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.