சரக்கு வேன்-பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி

சரக்கு வேன்-பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலியானார்.

Update: 2023-01-30 18:13 GMT

ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் கடந்த 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி, மணப்பாறை பகுதியிலிருந்து 3 ஜல்லிக்கட்டு காளைகளுடன் 7 பேர் கலந்து கொண்டு சரக்கு வேனில் காளைகளை ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். வம்பன் பகுதியில் சென்றபோது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று சரக்கு வேன் மீது மோதியது. இதில் பூலாங்குளத்தை சேர்ந்த டிரைவர் விக்கி (வயது 30), காளைகளை அழைத்து வந்த செவலூரை சேர்ந்த மதியழகன் (25) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 3 காளைகள் செத்தன. மற்றவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணப்பாறையை சேர்ந்த தர்மஅழகு (30) என்பவரும் கடந்த 23-ந் தேதி இறந்தார். இந்நிலையில், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணப்பாறை தாலுகா செவலூர் நல்லதம்பி தெருவை சேர்ந்த முத்தழகன் மகன் அழகு சுசீந்திரன் (29) என்பவரும் இன்று  சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்