நாட்டு வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்
நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்.
நெல்லை டவுன் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சிலர் நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து அதை வீசி வெடிக்க செய்தனர். மேலும் அவர்கள் தங்களின் செல்போனில் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் டவுன் அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித் (19) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் மற்றொரு நபரான டவுன் ஆசாத் நகரை சேர்ந்த தவுபிக் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.