வேன் புகுந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு
பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்த விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
தாயில்பட்டி,
பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்த விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
பாதயாத்திரை
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு, ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி பல்ேவறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
அதேபோல வெம்பக்கோட்டை அருகே நதிக்குடி பகுதியில் ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர், இருக்கன்குடிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். தாயில்பட்டி, சாத்தூர் மெயின் ரோடு வழியாக சம்பவத்தன்று நள்ளிரவில் நடந்து வந்தனர். பூசாரி நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த ஒரு ேவன் திடீரென பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.
2 பேர் பலி
இதில் கனி என்பவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 40), அந்த வேன் மோதி உடல் நசுங்கி பலியானார். மேலும் சுப்புராஜ் என்பவருடைய மனைவி முத்துலட்சுமி (40), இவருடைய மகள் சண்முகப்பிரியா (16) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 2 பேரை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதில் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய தாய் முத்துலட்சுமிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் ஒருவர் சாவு
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.