வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
நெல்லை அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் வெள்ளியப்பன் (வயது 30). இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் நேற்று முன்தினம் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை மூக்கன் உள்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற சுப்பு (35) என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.