தனியார் பஸ் டிரைவரை தாக்கிய மற்றொரு டிரைவர் கைது
நேரப்பிரச்சினையால் தகராறில் தனியார் பஸ் டிரைவரை தாக்கிய மற்றொரு டிரைவர் கைது செய்யப்பட்டாா்.
விக்கிரவாண்டி:
விழுப்புரத்தில் இருந்து திண்டிவனத்துக்கு இயக்கப்படும் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக கடலூர் பில்லாளிதொட்டியை சேர்ந்த சிவராஜ்(வயது 21) என்பவர் உள்ளார். அதே தடத்தில் இயக்கப்படும் மற்றொரு தனியார் பஸ்சில் டிரைவராக விழுப்புரத்தை சேர்ந்த தங்கதுரை(32) என்பவரும் உள்ளார். நேற்று முன்தினம் 2 பஸ்களும் ஒரே நேரத்தில் இயக்கியதால் டிரைவர்களுக்குள் நேரப்பிரச்சினை சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்த பஸ்சை மறித்த டிரைவர் தங்கதுரை, மற்றொரு பஸ் டிரைவரான சிவராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை கைது செய்தனர்.