நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி சிவபுரிபட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மா வர்ஷினி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சனிப்பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்திக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை ஐந்து கோவில் தேவஸ்தானம் எஸ்.வி.மங்கலத்தில் உள்ள ஆத்மநாயகி அம்பாள் சமேத ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் முன்பு உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நந்தீஸ்வரர் சிலை சுற்றிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன.