அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
கல்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கல்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மங்களம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பவுல் வரவேற்றார். காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி கலந்துகொண்டு விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் வட்டார கல்வி அலுவலர்கள் மேத்யூ, புஷ்பராணி, கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி, துணைத்தலைவர் தெய்வானை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் அமுதா ஜூலியட் நன்றி கூறினார்.