சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடாபிஷேக விழா

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.;

Update: 2023-09-10 20:50 GMT

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை நா.கருப்பம்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் சதீஸ்வரன், துணைத்தலைவர் புரவி, பொருளாளர் செந்தில்குமார், அம்பாள்தங்கவேல் மற்றும் நிா்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்