அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-05-26 19:11 GMT

வேலூரை அடுத்த அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆண்டு விழா (மிரா மேஸ்டோர்ஸ்) கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி நிறுவனரும், தலைவருமான எஸ்.ராமதாஸ், செயலாளரும், பொருளாளருமான ஜி.தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், சிறப்பு விருந்தினர்களாக டி.வி.புகழ் அசார், திரைப்பட நடிகர் ஆனந்த் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் நடனம், பாடல், சிலம்பம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியர் ஜி.வேதகிரி, முதல்வர் டி.கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன், இயக்குனர்கள் ஆர்.பிரசாந்த், டி.கிஷோர்குமார், துறைத்தலைவர்கள், ஊழியர்கள், மாணவ -மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்