மகா மாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா

சேரன்குளம் மகா மாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா;

Update: 2023-07-03 18:45 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே சேரன்குளம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் குளக்கரையில் இருந்து பால்குடம் மற்றும் செடில்காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் மகாமாரியம்மன் மற்றும் ஆள்காட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்