கோவில் விழாவில் அன்னதானம்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கடலையூர் கற்பக விநாயகர் கோவில் பொங்கல் விழாவில் அன்னதானத்தை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.;

Update: 2022-06-12 17:02 GMT

கோவில்பட்டி:

கடலையூர் கற்பக விநாயகர்- பாம்புலி அம்மன் கோவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலையில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கோவிலில் தரிசனம் செய்து, அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் மற்றும் நகரசபை கவுன்சிலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்