பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அமைதி ஊர்வலம்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது;

Update: 2023-02-03 17:15 GMT

திருவண்ணாமலை

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது

திருவண்ணாமலையில் நகர தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால், பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.முத்து, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் விஜயலட்சுமிரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கொசமடத் தெரு, கிருஷ்ணன் தெரு வழியாக அண்ணா சிலையை வந்தடைந்தது. பின்னர் சட்டமன்ற துணை சபாநாயகர் தலைமையிலான நிர்வாகிகள் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்