ராஜாதோப்பு ஆசிரமத்தில் அன்னப்பூரணி அரசு அம்மா அவதார திருநாள்
ராஜாதோப்பு ஆசிரமத்தில் அன்னப்பூரணி அரசு அம்மா அவதார திருநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜாதோப்பு பகுதியில் அன்னப்பூரணி அரசு அம்மா ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரமத்தில் அன்னப்பூரணி அரசு அம்மாவின் அவதார திருநாள் நடந்தது. அதையொட்டி சென்னை, தர்மபுரி, கோவை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகை தந்தனர்.
பின்னர் அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு பாதபூஜை செய்தும், மாலை அணிவித்தும், மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் குடும்ப பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முறையிட்டவர்களுக்கு அன்னபூரணி அரசுஅம்மா அருள் வாக்கு கூறி ஆசி வழங்கினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.