விவேகானந்தா கேந்திராவில் அன்னபூஜை

விவேகானந்தா கேந்திராவில் அன்னபூஜை நடந்தது.

Update: 2022-07-04 20:59 GMT

நாகர்கோவில்:

விவேகானந்தா கேந்திராவில் அன்னபூஜை நடந்தது.

'வீரத் துறவி' என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சபாக்கிரக அரங்கத்தில் நேற்று காலை அன்னபூஜை நடைபெற்றது.

இதையொட்டி குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்தா கேந்திரா கிராம முன்னேற்ற திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட அரிசியை மலைபோல் குவித்து வைத்து அதன் மேல் அன்னபூரணி சிலையை வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடைபெற்றது. மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத் ரானடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படங்களுக்கு கேந்திர நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர் பிரார்த்தனையுடன் அன்னபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அகில பாரத விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் துணை தலைவர் நிவேதிதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி அன்ன பூஜையை தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர், ஊழியர்கள் மற்றும் விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்