சேஷ வாகனத்தில் எழுந்தருளிய அண்ணன் பெருமாள்
சீர்காழி அருகே சேஷ வாகனத்தில் அண்ணன் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.;
திருவெண்காடு:
சீர்காழி அருகே அண்ணன் கோவில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த தலம். 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அண்ணனாக விளங்குகிறார். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.. நேற்று முன்தினம் இரவு கருட சேவை உற்சவம் நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மேள தாளம் முழங்கிட வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், உபயதாரர்கள், ஸ்தலத்தார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு திருக்கல்யாணமும், 26-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.