சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளிய அண்ணன் பெருமாள்

சீர்காழி அருகே சந்திர பிரபை வாகனத்தில் அண்ணன் பெருமாள் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2023-09-22 00:15 IST

திருவெண்காடு:

சீர்காழி அருகே அண்ணன் கோவில் கிராமத்தில் கோவில் கொண்டுள்ள அண்ணன் பெருமாள் கோவிலில் கடந்த 17-ந் தேதி ஆண்டு பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அண்ணன் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கணக்கர் ரத்தினவேல், உபயதாரர் திருவேங்கடத்து ஐயங்கார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்