அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்

கல்வராயன்மலை அருகே அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

Update: 2023-06-26 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலை அருகே பொருப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ உண்ணாமலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசால பூஜையுடன் ஆரம்பித்து, விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், அஷ்டதிக் பால பூஜை, சூரிய பூஜை, வேதிகார்சனை, தத்துவார்சனை, மூல மந்திர பூர்ணாஹூதி ஹோமம், நாடி சந்தானம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீா் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் விமான கலசங்களுக்கும், இதன் பின்னர் மூலவர் மகாகணபதி, உண்ணாமலை அம்பாள், சமேத அண்ணாமலையார் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பொருப்பம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்