நடைப்பயணத்தால் அண்ணாமலை உடல் நலம் சீராகும் - சீமான்
நடைப்பயணத்தால் அண்ணாமலை உடல் நலம் சீராகுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்கிறார். அவரது நடைப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது;
"அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணம் பழைய மாடல். நடைப்பயணத்தால் அவரது உடல்நலம் சீராகும். பத்தாண்டு காலை நாட்டை ஆண்டு குட்டிச்சுவராக்கிவிட்டு நடைப்பயணம் மேற்கொள்வதால் எதுவும் நடக்காது." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.