அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்இளங்கலை படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்ட, பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இதையொட்டி, பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தரவரிசை பட்டியலில் கடலூர் மாணவர் ஸ்ரீராம், பண்ருட்டி குணசேகரன், ஈரோடு மாவட்டம் பவானி மாணவி கவுசிகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குனர் மாணிக்கம், துணை இயக்குனர் பாலபாஸ்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், துணைவேந்தரின் செயலாளர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி கலந்தாய்வில் கலந்து கொள்ள கலந்தாய்வு கட்டணம் செலுத்த ஜனவரி 20-ந் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பற்றிய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.