கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார் - காவல்துறை தகவல்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Update: 2022-10-29 13:48 GMT

கோப்புப்படம்

சென்னை,

கோவை கார் வெடிப்பு குறித்து, 18-ந்தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த நிலையில் கோவையில் கார் வெடிப்பு நிகழப்போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக அண்ணாமலை கூறியது அபத்தமானது. அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கையாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கில் சட்ட நடைமுறை காலதாமதமின்றி பின்பற்றப்பட்டு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே என்ஐஏ விசாரணைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார் என்றும் கூறிய போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போலீசார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்