பிராயச்சித்தம் தேடவே அண்ணாமலை பாதயாத்திரை - அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி

பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2023-07-30 09:00 GMT

சென்னை,

சென்னை தங்கசாலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஜெயின் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம், மற்றும் குழந்தைகளுக்கான பரிசு பெட்டகம் ஆகியவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் மனதில் நிறைந்துள்ளார். இதை மாற்ற யார் வந்தாலும், என்ன செய்தாலும் முடியாது. பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடி பாதயாத்திரை செல்கிறார்கள்.

ஒன்றிரண்டு சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது. திராவிட மண்ணில் தி.மு.க. பெரியார், அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்துக்கு எதிராக எப்படிப்பட்ட ஜாம்பவான் களை கொண்டு நிறுத்தினாலும் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்