கோவை சம்பவத்தில் அண்ணாமலை அரசியல் செய்கிறார் - திமுக செய்தி தொடர்பாளர்

கோவையில் வாக்கு வங்கியை தக்க வைக்க அண்ணாமலை அரசியல் செய்கிறார்.

Update: 2022-10-30 14:36 GMT

சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி கூறியதாவது ;

கோவையில் வாக்கு வங்கியை தக்க வைக்க அண்ணாமலை அரசியல் செய்கிறார்.ஜமேசா முபின் குறித்த எந்த கடிதமும் தமிழக அரசுக்கு மத்திய அரசால் அனுப்பப்படவில்லை.

பாதுகாப்பை அதிகப்படுத்த மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டதுமத்திய அரசின் அறிக்கையை அண்ணாமலைக்கு ஒரு அதிகாரி வழங்கியது போலவே, எனக்கும் வழங்கப்பட்டது.

திமுக மீது அண்ணாமலை வைக்கும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை.தன் சொந்த கட்சி தேவைக்காக மாநிலத்தை பதற்றமாக வைத்துள்ளார் அண்ணாமலை.என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்